Thursday, April 30, 2020

அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதன் விளைவுகளும்


ஆராய்ச்சி விளைவுகள்:

நிலை மின்சாரம் மற்றும் காந்தவியல் (1600):
மின்னோட்டம் (18ஆம் நூற்றாண்டு) அனைத்து மின் உபகரணங்கள், டைனமோ, மின்சார நிலையங்கள், நவீன மின்னியல், மின்விளக்கு, தொலைக்காட்சி, மின்சார வெப்பமியக்கி, மண்டைஒட்டு காந்த தூண்டுதல், ஆழ் மூளை தூண்டுதல், காந்த நாடா, ஒலிபெருக்கி, திசைகாட்டி மற்றும் இடிதாங்கி உட்பட.

ஒளியின் விளிம்பு விளைவு (1665): ஒளியியல், ஒளியிழை (1840), நவீன நீர்மூழ்கி தகவல்தொடர்பு கேபிள், கேபிள் டிவி மற்றும் இணையம்.

ஜெர்ம் கோட்பாடு (1700): சுகாதாரம், தொற்றுநோய் பரவலை தடுக்க வழிவகுத்தது. பிறபொருளெதிரி, நோய் கண்டறிதல் நுட்பங்களுக்கு வழிவகுத்தது மற்றும் இலக்கு சிகிச்சைகள், புற்றுநோய் வரும்முன் அகற்று சிகிச்சைகள்.

தடுப்பு மருந்தேற்றம் (1798): வளர்ந்தநாடுகளிலிருந்து அதிகளவில் தொற்றுநோய்களை நீக்க வழிவகுத்தது, மேலும் உலகளவில் சின்னம்மை நோயை நீக்கியது.

ஒளிமின்னழுத்த விளைவு (1839): சூரிய மின்கலம் (1883), இதிலிருந்து சூரிய மின் ஆற்றல், சூரிய சக்தியினால் இயங்கும் கைக்கடிகாரம், கணிப்பான்கள் மற்றும் பிற சாதனங்கள்.

புதனின் விசித்திர சுற்றுப்பாதை (1859) மற்றும் வேறு ஆராய்ச்சிகள்
சிறப்புச் சார்புக் கோட்பாடு (1905) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு (1916): செயற்கைகோள் சார்ந்த தொழில்நுட்பங்களான புவியிடங்காட்டி (1973), செய்மதி இடஞ்சுட்டல் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.

வானொலி அலைகள் (1887): வானொலியானது நன்கறிந்த தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் பொழுதுபோக்குகளில் மட்டுமின்றி எண்ணிலடங்கா வகையில் பயன்படுகின்றன. மற்றைய பயன்பாடுகள் அவசர சேவை, ரேடார் (கடற்பயணம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு), மருத்துவம், வானியல், கம்பியற்ற தகவல்தொடர்பு, புவி இயற்பியல், மற்றும் பிணையம். மேலும் இது ஆராய்ச்சியாளர்களை வானொலி அலைகளுக்கு நெருங்கிய அதிர்வெண் கொண்ட நுண்ணலைகளை பயன்படுத்தி உலகம் முழுவதும் உணவினை சமைக்க கண்டறிய வழிவகுத்தது.

கதிரியக்கம் (1896) மற்றும் எதிர்ப் பொருள் (1932): புற்றுநோய் சிகிச்சை (1896), கதிரியக்கக் காலமதிப்பீடு (1905), அணுக்கரு உலைகள் (1942) மற்றும் அணு ஆயுதம் (1945), சுரங்க பொறியியல், பெட் வரைவி (1961), மற்றும் மருத்துவ ஆராய்ச்சி.

எக்சு-கதிர் (1896): மருத்துவப் படிமவியல், சிடி வரைவி.

படிகவியல் மற்றும் குவாண்டம் இயங்கியல் (1900): குறைக்கடத்திக் கருவிகள் (1906), இதிலிருந்து நவீன கணித்தல் மற்றும் கம்பியற்ற கருவிகளுடன் ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு உட்பட – செல்லிடத் தொலைபேசி,  எல்.இ.டி விளக்குகள் மற்றும் சீரொளிகள்.

நெகிழி (1907): பேக்கலைட்டு களில் ஆரம்பித்து, பல விதமான செயற்கை பாலிமர்கள் பலவிதமான தொழிற்சாலை மற்றும் தினசரி பயன்பாடுகளில் உள்ளது.

நுண்ணுயிர் எதிர்ப்பி (1880s, 1928): சல்வார்சன், பென்சிலின், டாக்ஸிக்ளைன்.

அணு காந்த அதிர்வு (1930):  அணு காந்த அதிர்வு, ஸ்பெக்ட்ரோஸ்கோபி (1946), காந்த அதிர்வு இமேஜிங் (1971), இயங்ககூடிய காந்த அதிர்வு இமேஜிங் (1990).

******


No comments:

Post a Comment